சேதுராமன் பிள்ளை காலனி ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி.
சேதுராமன் பிள்ளை காலனி ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி.
ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் ஆலயம் பால்குடம் எடுக்கும் விழா.
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ள ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் ஆலயத்தின் 26ம் ஆண்டு. பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது.
இக்கோவில் திருவிழா வருடம் வருடம் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடம் 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை கோவில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் காப்புகட்டுதல், அலங்காரம் திருவிளக்கு பூஜை, விசேஷ அபிஷேகங்கள், பால்குடம் எடுத்தல், பூக்குழி மற்றும் தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட விழா நடைபெற்றது.
இதில் 5ம் தேதி வெள்ளிகிழமை இன்று காலை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கவேரி படித்துறையிலிருந்துபால்குடம், தீ சட்டி எடுத்து அண்னசிலை, ஆண்டாள் வீதி, வடக்கு ஆண்டால் வீதி, பெரியக்கடை வீதி காந்தி மார்கெட், மேலரண் சாலைவழியாக டி.விஎஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ நவசத்தி மாரியம் கோவிலுக்கு வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்கார ஆராதனையும். நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைவருக்கும் அண்ணதானம் வழங்கப்பட்து.
இவ்விழாவிற்கு முன்னாள் டிவி.எஸ் தொழிலாளர் சங்க தலைவர்.ஆறு. இராசமாணிக்கம்,
தலைமையேற்று நடைபெற்ற
இவ் விழாவில் மாதேஸ்வரி ராசமாணிக்கம் குடும்பத்தினர் காரைக்குடி வைர வியாபாரி ஆறுமுகம்பிள்ளை, ராசாத்தி அம்மாள் குடும்பத்தினர், மற்றும் சேதுராமன் பிள்ளை காலனி வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.