திருச்சி 36வது வார்டு சாலையில் வீணாகும் குடிநீர்,கண்டுகொள்ளாத மாநகராட்சி, நடவடிக்கை எடுக்க மக்கள் சக்தி இயக்கத்தினர் கோரிக்கை.
திருச்சி 36வது வார்டு சாலையில் வீணாகும் குடிநீர்,கண்டுகொள்ளாத மாநகராட்சி, நடவடிக்கை எடுக்க மக்கள் சக்தி இயக்கத்தினர் கோரிக்கை.
திருச்சி மாநகராட்சி 36ஆவது வார்டு,பொன்மலைப்பட்டி, காந்தி தெரு, (இந்தியன் பேங்க் அருகில்) சாலையில் கடந்த ஒரு வாரம் மேலாக குடிதண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடை கலக்கிறது.
இதனால் தண்ணீர் வீணாவதுடன், சாலையும் சேதமாகிறது.
இப்பகுதி மக்கள் தண்ணீருக்கும், சாலை செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
எனவே திருச்சி மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது .