சேறும் சகதியுமாக உள்ள திருச்சி செந்தண்ணீபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி .நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி அதிகாரிகள் ?
சேறும் சகதியுமாக உள்ள திருச்சி செந்தண்ணீபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி .நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி அதிகாரிகள் ?
திருச்சி
செந்தண்ணீர்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று காலை முதல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மலர்கள், மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு மலர்கள் அளித்தனர்.
வகுப்புகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அரசு அறிவுறுத்த்லின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆசிரியர்கள் செய்து இருந்தனர் .
ஆனால் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் பள்ளியிலிருந்து மழை நீர் வெளியே செல்லாமல் தேங்கி சேரும் , சகதிமாக உள்ளதால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிபட்டார்கள்.
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் செந்தண்ணீர்புரம் பள்ளி பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.