Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மத்திய இணை அமைச்சரை பதவி விலகக் கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.

திருச்சியில் மத்திய இணை அமைச்சரை பதவி விலகக் கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.

0

'- Advertisement -

திருச்சி தலைமை தபால் நிலையம் முன்
மூன்று தொழிற்சங்கத்தினர் இன்று போராட்டம்.

Ad banner

உத்திரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் மீதான வன்முறைத் தாக்குதலை கண்டித்தும்,

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டியும்,மத்திய இணை அமைச்சர் மகன் உள்பட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும்,

பொதுத்துறை நிறுவனங்களை ஏலம் விடுவதை கைவிடக் கோரியும் தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சியில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி ராமராஜ், ஏஐசிசிடியூ அருண்குமார் ஆகியோர் விளக்க உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மூன்று தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திரசேகர், கருணாநிதி, ஜெயபால், ராஜேந்திரன், மணிமாறன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.