Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கன்னியாகுமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு தொடர் ஓட்டம். மாஸ்டர் சர்வேஷ்க்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

கன்னியாகுமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு தொடர் ஓட்டம். மாஸ்டர் சர்வேஷ்க்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

0

விழிப்புணர்வு தொடர் ஓட்டம்.
மாஸ்டர் சர்வேஷ்க்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

தாம்பரம் மாநகரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் மாஸ்டர் சர்வேஷ் தரமான கல்வி நிலையான வளர்ச்சி (SDG) இலக்குகள் என்கின்ற ஐக்கிய நாடுகள் சபையில் தனது உறுப்பு நாடுகள் இணைந்து உருவாக்கிய நிலையான வளர்ச்சி இலக்குகள் என்கின்ற 17 உலகளாவிய இலக்குகளை அறிவித்து 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களும் பசி, பட்டினியின்றி அமைதியாக வாழ வேண்டும் என்கின்ற உன்னத குறிக்கோளை மையமாக வைத்து இந்த அற்புதமான தொடர் ஓட்டத்தை மாஸ்டர் சர்வேஷ் கடந்த காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி, காந்தி மண்டபம், திருவள்ளுவர் சிலை அருகில் தொடங்கி இன்று (10.10.2021) ஏறக்குறைய 400 கிலோ மீட்டர் ஓடி திருச்சிராப்பள்ளிக்கு வந்துள்ளார்.

இவர் வரும் வழியில் அங்குள்ள காவல் அதிகாரிகள் அவர் தொடர் ஓட்டம் வெற்றியடைய வாழ்த்து கூறி உற்சாகபடுத்தி வழியனுப்பினார்கள்.

திருச்சிக்கு வந்தடைந்த அவரை வரவேற்ற திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் சக்திவேல் மாஸ்டர் சர்வேஷின் 750 கிலோ மீட்டர் தொடர் ஓட்டம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்து, ஊக்கப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள சிவானி கல்விக் குழுமத்தின் தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டு மாணவனின் விடாமுயற்சி தொடர் ஓட்டம் வெற்றியடைய வாழ்த்துக் கூறினார்.

மேலும் லைன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் பிரசாந்த், வின்சன்ட், செஞ்சிலுவை சங்க பொறப்பாளர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கு பெற்று சர்வேஷின் சாதனை வெற்றியடைய வாழ்த்துக்களை கூறி வழியனுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் சாய்ராம் கல்வி குழுமத்தின் செயல் இயக்குனர், அறங்காவலாகள் முனுசாமி, பாலசுப்ரமணியன் மற்றும் ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.