திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ராசலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் சக்தி இயக்கம் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அண்ணாமலை நகர் பனானா லீப் உணவகம் அரங்கத்தில் மாநிலத் தலைவர் மருத்துவர் த.இராசலிங்கம் தலைமையில் நடந்தது.
மக்கள் சக்தி இயக்க பொருளாளர் கே.சி. நீலமேகம், துணைத் தலைவர் மதுரை அசோகன், துணை செயலாளர் கரூர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
பொதுக்குழு மாநில பொதுச் செயலாளர் முனைவர் லெ.பாஸ்கரன் தொடக்கவுரை ஆற்றினார்.
திருச்சி மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோ அனைவரையும் வரவேற்றார் .
கூட்டத்தில் சிறந்த சேவைக்கான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி விருது திருச்சி .கே சி. நீலமேகம், திருவள்ளுவர் விருது பெரம்பலூர் முனைவர் பெரியசாமி, டாக்டர் ஏ.சண்முகம் விருது . தஞ்சை முனைவர் முருகானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
கூட்டத்தில்கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. நல்லாட்சி வழங்கும் தமிழக அரசு மது விலக்கை அமுல்படுத்தி மக்கள் நலனை நிரந்தரமாக்கும் அரசாக செயல்பட வேண்டும்.
2. மத்தியில் லோக்பால் , மாநிலத்தில் லோக் ஆயுத்தா நடைமுறை படுத்த வேண்டும்.

3. மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நீதி போதனை வகுப்பை அனைத்து பள்ளியிலும் நடைமுறை படுத்த வேண்டும்.
4 தமிழக அரசு அனைத்து அலுவலத்தில் பொதுமக்களால் வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் சீட்டு வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
5.மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
6. நதிகளை புனரமைத்து, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
7. அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கிறது.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் தூத்துக்குடி.கந்தசாமி, மதுரை.சேகர், புதுக்கோட்டை முனைவர் கணேசன், சிவகங்கை முனைவர் .புகழேந்தி, தஞ்சை – பேரா.முருகானந்தம், கரூர் – விசுவநாதன், பெரம்பலூர் சிவக்குமார், மாநில ஆலோசகர் கவிஞர் .கலியுகன் கோபி, முனைவர் ஜெயப்பிரகாஷ், மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
திருச்சி மாநகர செயலாளர் ஆர்.வாசுதேவன் நன்றியுரை ஆற்றினார்.