Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சிறப்பு பரிசு. திருச்சி மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சிறப்பு பரிசு. திருச்சி மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

0

கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்றோர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 56 நபர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பரிசுகள் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் 6 வது கொரோனா தடுப்பூசி முகாம் 23.10.2021 அன்று நடைப்பெற்றது .

இம்முகாமில் தடுப்பூசி போட்ட பயணாளிகளுக்கு கோட்டம் வாரியாக முதல் பரிசு -ஃப்ரிட்ஜ் 4 நபர்களுக்கு , இரண்டாம் பரிசாக வாஷிங் மெஷின்’ 4 , மூன்றாம் பரிசாக கிரைண்டர்- 8 நபர்களுக்கு மற்றும் சைக்கிள் 40 நபர்களுக்கு வழங்க அறிவிக்கப்பட்டது .

இதன் பேரில் 23.10.2021 அன்று நடைப்பெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 27,532 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது .

மேற்படி நபர்களுக்கு பரிசு வழங்க கோட்டம் வாரியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 56 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு -பிரிட்ஜ் 4 நபர்களுக்கு , இரண்டாம் பரிசாக வாஷிங் மெஷின் 4 , மூன்றாம் பரிசாக கிரைண்டர்- 8 நபர்களுக்கு மற்றும் மிதிவண்டி- 40 நபர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்களால் இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் வழங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பி.சிவபாதம், உதவி ஆணையர்கள் ச.நா. சண்முகம்,சு. கமலக்கண்ணன்,எஸ். செல்வ பாலாஜி , அக்பர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.