திருக்கோயில் வரவு செலவுகளில் மோசடி,கண்டு கொள்வாரா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.திருச்சி வையாபுரி அறிக்கை.
திருக்கோயில் வரவு செலவுகளில் மோசடி,கண்டு கொள்வாரா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.திருச்சி வையாபுரி அறிக்கை.
தியாகி
வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருக்கோயிலில் வரவு செலவுகளில் மோசடி கண்டு கொள்வாரா❓ இந்து சமய அறநிலைத்துறை ஆணையர்.
திருச்சி மாநகரம் பெரிய கடைவீதியில் அருள் பாலிக்கும் அ/மி,பைரவர் திருக்கோயில் மற்றும் பாலக்கரை பகுதியில் உள்ள அ/மி, செல்வ விநாயகர் திருக்கோயில் அதற்கு உட்பட்ட குழு திருக்கோயில்களில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை அருள்மிகு பைரவர் திருக்கோயிலுக்கு கட்டுப்பட்ட குழு திருக்கோயில்களில் வரவு செலவுகளில் போலி ஆவணங்கள் கொண்டு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
திருக்கோயில்களில் வரவு செலவுகளை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தணிக்கை அறிக்கை அலுவலர்களும் இது போன்ற மோசடிகளுக்கு உடந்தையாக செயல்படுவதாக பக்தர்கள் கருத்தாக உள்ளது.
அருள்மிகு, பைரவர் திருக்கோயிலுக்கு உட்பட்ட திருக்கோயில்கள் 8 உள்ளது. மேற்கண்ட குழு திருக்கோயில் செயல் அலுவலர் சுவாமிக்கு நித்திய படிக்க பூஜைக்கு அரசு வழங்கியுள்ள பணம் மாதம் சுமார் ரூபாய் 4000/ என்று தெரியவருகிறது.
ஆனால் சம்பந்தப்பட்ட குழு திருக்கோயிலின் செயல் அலுவலர் அவர்கள் சுவாமியின் நித்திய கால பூஜைக்காக வழங்கப்படும் நிதியை வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.
சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் பணிபுரிகின்ற குருக்கள் இடத்தில் நித்ய கால பூஜைக்கு பொருட்களோ ❓அல்லது பணமோ ❓வழங்கியது போல் சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் பணிபுரிகின்ற அர்ச்சகரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு இதுபோல் போலியான கையொப்பங்கள் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இப்படி பல்வேறு முறைகேடுகள் சம்பந்தப்பட்ட குழு கோயில்களில் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
போலி கையொப்பங்கள் போலி ஆவணங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது .
சம்பந்தப்பட்ட குழு திருக்கோயிலில் பணிபுரிகின்ற பணியாளர் முதல் அர்ச்சகர் வரை விசாரணை செய்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது.
அருள்மிகு பைரவர் திருக்கோயில்
உட்பட்ட குழு கோயில்களில் நடைபெற்றுள்ள வரவு செலவுகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகள் போலியானவை என்று தெரியவருகிறது.
கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பெறப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தால் ரசீது உண்மை தன்மை தெரியவரும் பெறப்பட்ட ரசிகர்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்தால் உண்மையான ரசீது அல்லது போலியாக தயாரிக்கப்பட்ட ரசீது என்று தெரியவரும்.
இந்த மோசடி குறித்து எங்கள் யூனியன் சார்பில் திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் அவர்களிடம் எழுத்துப்பூர்வமான புகார் கடந்த சில மாதங்கள் முன் நேரிலும் பதிவு அஞ்சல் மூலமும் கொடுக்கப்பட்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் கிடையாது.
இந்த ஊழல் முறைகேடுகளுக்கு திருச்சி உறையூர் சாலை ரோட்டில் இயங்கும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் திருக்கோவிலின் வரவு செலவுகளை தணிக்கை செய்யக்கூடிய தணிக்கை அலுவலகம் இயங்கி வருகிறது.
அந்த அலுவலகத்தின் திருக்கோயில் நடைபெறும் வரவு-செலவு மற்றும் அதற்கான ஆவணங்களை ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை வழங்குவது நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட தணிக்கை அறிக்கை அலுவலகத்தில் அ/மிபைரவர் திருக்கோயில் உட்பட்ட 8 திருக்கோயில்களில் வழங்கப்பட்டுள்ள வரவு செலவுகள் அதற்கான ரசீதுகளை எந்த அடிப்படையில் ஆய்வு செய்தார் என்று தெரியவில்லை.
மேற்கண்ட திருக்கோயில்களில் வழங்கப்பட்டுள்ள ரசீதுகளை ஆய்வு செய்யாமல் இருந்துள்ளது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
மேற்கண்ட திருக்கோயிலின் குழு கோயில்களிலேயே வரவு செலவு மற்றும் அதற்கு ஆதாரமாக திருக்கோயிலின் செயல் அலுவலர் வழங்கியுள்ள ரசிகர்களையும் மறு ஆய்வு செய்தால் நடைபெற்றுள்ள போலி மோசடி முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வருவதற்கு வாய்ப்பாக அமையும்.
மேற்கண்ட குழு திருக்கோயில்களில் மறு விசாரணை செய்யும் வரை சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் செயல் அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வங்கி பரிமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தம் செய்து விசாரணை மேற்கொண்டால் நடைபெற்றுள்ள மோசடிகள் தெரியவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பக்தர்களால் வழங்கப்பட்டுள்ள காணிக்கையாய் கொண்டு திருக்கோயில் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென எண்ணத்தில் வழங்கப்பட்ட காணிக்கையின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுடைய மன வேதனையாக உள்ளது. பக்தர்களின் மன வேதனையை அறிந்து உண்மையை நிலைநாட்ட மேற்கொண்ட குழு திருக்கோயில்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரனோ வைரஸ் காரணமாக தமிழில் இருக்கக்கூடிய அனைத்து வழிபாட்டு தலங்களும் அரசின் உத்தரவுப்படி பக்தர்களின் தரிசனம் இல்லாமல் பூஜைகள் நடைபெற்றது .
அதன் பிறகு வைரஸ் தாக்கம் குறைந்த பின் அரசு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கியது. சுவாமி தரிசனத்திற்கு வருகை புரிகின்ற பக்தர்களுடைய பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைரஸ் பரவல் ஏற்படாமல் இருப்பதற்காக தேவையான உபகரணங்களும் மாஸ் மற்றும் கிருமிநாசினிகள் போன்றவைகள் பக்தர்களின் நலனுக்காக ஆலயங்களில் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது, அதனடிப்படையில் மேற்கண்ட அருள்மிகு பைரவர் திருக்கோயில் குறிப்பட்ட 8 குழு திருக்கோயில்களில் செயல் அலுவலர் மாஸ் கிருமி நாசி அதை பயன்படுத்தும் கருவி போன்றவற்றின் போலி ரசித்துக்கொண்டு தரமில்லாத கிருமிநாசினி கருவிகள் மற்றும் மாஸ்க் கிருமி நாசினி போன்றவை வாங்கப்பட்டுள்ளது ஆனால் கொள்முதல் செய்தல் போல் போலி ரசீதுகள் பெறப்பட்டு அதற்கான ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்று தெரியவருகிறது வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை காக செயல் அலுவலர் மூலம் பெறப்பட்டுள்ள பொருட்களின் தரத்தையும் கொள்முதல் செய்யப்பட்டதற்கான ஆவணம் மற்றும் அந்த நிறுவனத்தை நேரில் அழைத்து உண்மை தன்மை அறிய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் நடைபெற்றுள்ள மோசடிகள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன்.இந்து சமய அறநிலைத்துறை தணிக்கை அறிக்கை அலுவலர்கள் மற்றும் செயல் அலுவலர் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
என
‘தியாகி ‘வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி கூறி உள்ளார்.