Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விமான நிலையத்திற்குள் உள்ளூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டி சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு.

விமான நிலையத்திற்குள் உள்ளூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டி சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு.

0

திருச்சி விமான நிலையத்திற்குள் உள்ளூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்.

சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொது செயலாளர் சந்திரன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

திருச்சி விமான நிலையம் எதிர்புறம் உள்ள கார் ஸ்டாண்ட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இதில் 20க்கும் மேற்பட்டோர் டிரைவராக பணியாற்றி வருகின்றனர்.

இங்குள்ள வாகனங்கள் விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

இதுகுறித்து ஏர்போர்ட் அத்தாரிட்டி யிடம் பலமுறை மனு கொடுத்தும். நேரில் . பேசியும் இதுநாள் வரை அனுமதி தரவில்லை.

இந்நிலையில் கடந்த
2008ஆம் ஆண்டு சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெருநகரங்களில் அமைந்திருக்கும் விமான நிலையங்களில் ப்ரீபெய்ட் இணைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் இதை திருச்சி ஏர்போர்ட்டில் செயல்படுத்தாமல் உள்ளார்கள். இதுகுறித்து ஏர்போர்ட் அலுவலரிடம் அனுமதி கேட்டதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதிக்க வேண்டுமென கூறுகிறார்கள்.

ஒரு இடத்தில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், பஸ் நிலையம் ,விமான நிலையம், ரயில் நிலையம் வந்தால் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் வழிகாட்டுதலாக இருக்கும் போது,

திருச்சி விமான நிலையத்தில் வெளியில் உள்ளவர்கள் வாடகை வாகனங்களில் பயணிக்கும்போது, உள்ளூரில் உள்ள கார் ஸ்டாண்ட் வாகனங்களை பல ஆண்டு காலமாக உள்ளே அனுமதிக்காமல் இருக்கின்றனர்.

எனவே உள்ளூர் வாகனங்களை திருச்சி விமான நிலையத்திற்குள் அனுமதிக்க ஆவண செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் மனுவைக் கொடுத்த பொழுது ஏர்போர்ட் ஸ்டாண்ட் தலைவர் பழனிசாமி, செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வினோத், குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.