ஆதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் வாழ்த்து.
ஆதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் வாழ்த்து.
அ.தி. மு.க பொன்விழா ஆண்டு – லோக் ஜனசக்தி கட்சி வாழ்த்து.
வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்’ என்ற வைர வரிகளுக்கு ஏற்ப தமிழக மக்களின் மனங்களில் புரட்சித் தலைவராக இன்றும் வீற்றிருக்கும் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுகளின் பொன்விழா ஆண்டில், தலைவர்களுக்கும் தொண்டர்களுக்குக்கும், தோழமை லோக் ஜனசக்தி மனப்பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
1972ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். அதே ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அ.தி.மு.க என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை. தொடங்கினார். கட்சி தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து,
50-வது ஆண்டு பொன்விழா தொடங்குவதை யொட்டி நேற்று முதல் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க.வை வழிநடத்தி வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள், பின்னர், கட்சிக் கொடியை இருவரும் ஏற்றி வைத்து, அதி.மு.க. பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டனர்.
அதன்பிறகு நிராமாமிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ. இரு பெரும் தலைவர்களும், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணார், எம்.ஜி.ஆர், ஜெயலனிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்
இதேபோல் அதி.மு.க பொன்விழா ஆண்டில் தமிழகம் முழுவதும், அ.தி.மு.கவினர் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடிவருகின்றனர் ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
“துணிவு, தூய்மை தன்னல மறுப்பு ஆகிய உயர்ந்த பண்புகளின் உறைவிடமான எம்,ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதி.மு.க. என்ற மாபெரும் மக்கள் இயக்கம் பொன்விழாவை கொண்டாடுகிறது. இந்த பொன்னாளில், புரட்சித தலைவி அம்மா வகுத்து கொடுத்த பானதயில் பயணிந்து மீண்டும் அதிமுக ஆட்சி மலர ஓயாதுஉழைப்போம் என நாம் அனைவரும் சூளுரைப்போம்” என்று அ.தி.மு.க ஒருங்கினைப்பானர் ஓ.பன்னீர்செல்ம் அவர்கள் தனது அறிக்கையில்
கூறியுள்ளார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா ஆகியோர் உயர்த்திப்பிடித்த அனைவருக்கும் கல்வி, சமத்துவம், சமூக நீதி, ஆண்-பெண் சமத்துவம் போன்ற கொள்கைகளுக்காகவே லோக் ஜனசக்தி கட்சியும் பாடுபட்டுவருகிறது.
மண்டல் நாயகன் மறைந்த மக்கள் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான்
அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அவரது இளைய சகோதரர்
மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பசுபதி பஸ்வான் அவகளால் தற்போது வழிநடத்தப்படும் லோக ஜனசக்தி கட்சி, தோழமை இயக்கமான அதிமுக வின் பொன் விழா ஆண்டில், அக்கட்சியின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மனப்பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.