மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிப்பு.மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிப்பு.மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிப்பு.
மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிப்பு.
நாமக்கல் மாவட்ட கலெக்டராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரேயா பி.சிங் பொறுப்பேற்றார்.
மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார்.
இரு மாதங்களுக்கு முன் ஓணம் பண்டிகைக்காக சொந்த மாநிலமான கேரள மாநிலத்திற்கு சென்று வந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் அவரும் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அண்மையில் மீண்டும் கேரளா சென்று வந்த நிலையில் அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது.
மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட அவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடனான பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்கவில்லை.
மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி கலெக்டர் பொறுப்பை கவனித்து வருகிறார்.