திருச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 95ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி. மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
திருச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 95ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி. மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற
மெகா தடுப்பூசி முகாமில் 95,145 பேருக்கு தடுப்பூசி.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மொத்தம் 95,145 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தினசரி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த செப்டெம்பர் 12, 19, 26 மற்றும் அக்டோபர் 3 ஆம் தேதிகளில் என மொத்தம் 4 மெகா தடுப்பூசி முகாம்கள் இதுவரையில் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது அக். 10 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை 5 ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழவதும் நடைபெற்றன.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில், 5 ஆவது மெகா தடுப்பூசி முகாம்களில் ஊரகப் பகுதிகளில் 418 இடங்களிலும் மாநகரப் பகுதிகளில் 200 என மொத்தம் 618 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதில், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி 7497 பேரும், இரண்டாவது தவணை 6235 பேரும், கோவிஷீல்டு தடுப்பூசிகளை முதல் தவணையாக 41,119 பேரும், இரண்டாவது தவணையாக 40,294 பேரும் என மாவட்டம் முழுவதும் இரு தடுப்பூசிகளும் இரு தவணைகளும் சேர்த்து மொத்தம் 95, 145 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில், புத்தூர் பிஷப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
நிகழ்வில் சுகாதாதரத்துறையினர், வருவாத்துறையினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.