திருச்சி தேசியக் கல்லூரியில் இராசரத்தினம் அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு.
திருச்சி தேசியக் கல்லூரியில் இராசரத்தினம் அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு.
திருச்சி தேசியக் கல்லூரியில் சொற்பொழிவு,
திருச்சி தேசியக் கல்லூரியில், தமிழாய்வுத்துறை மேனாள் துறைத் தலைவர் முனைவர் கு. இராசரத்தினம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சுந்தரராமன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் இரா. காமராசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு “கல்கி எனும் பேராளுமை’ என்ற பொருண்மையில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், கல்கியின் உரைநடைச் சிறப்பு, அவரின் பரந்து விரிந்த சமூக நோக்கு, நவீனத் தமிழியல் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டு, கல்கியின் நாட்டுப்பற்று, அவர் தமிழிசைக்குச் செய்த அரும்பணிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் அவர் விளக்கிப் பேசினார்.
தமிழ் வரலாற்றுப் புதின வரைவியலின் தந்தை எனப் போற்றப்படும் சிறப்புக்குரிய கல்கி, நமது திருச்சி தேசியக்கல்லூரி பள்ளியில் பயின்றது பெருமைக்குரிய ஒன்று என்பதையும் குறிப்பிட்டார்.
முன்னதாகத் தமிழாய்வுத்துறைத் தலைவர் ச. ஈஸ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழாய்வுத் துறையின் துணைத் தலைவருமான ந.மாணிக்கம் நன்றி கூறினார்.
கல்கி எழுதிய காற்றினிலே வரும் கீதம்” என்னும் பாடலை, இளநிலை வேதியியல் 2ஆம் ஆண்டு மாணவி மு.பு. ஸ்ரீகாமாட்சி பாடினார். பல்துறை சார்ந்த பேராசிரியர்களும் மாணவமாணவிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.