Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யபட்டுள்ளது. இயக்குனர் ராதாகிருஷ்ணன் தகவல்.

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யபட்டுள்ளது. இயக்குனர் ராதாகிருஷ்ணன் தகவல்.

0

ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் 11ம் ஆண்டு துவக்க விழா .

சமூக அக்கறையுடன் திருச்சி சுற்று வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் நிறுவப்பட்ட மருத்துவமனை 10 ஆண்டுகள் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்து 11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது..

பல ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வ அளித்த மருத்துவமனை .

இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்து அவர்களை குணப்படுத்தியுள்ளனர்.
வெளிநோயாளிகள் 2 லட்சம் பேர் வந்துள்ளனர். உள்நோயாளிகள் 70ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டு நலமாக வீடு திரும்பியுள்ளனர்.

இவை அனைத்திற்கும் காரணம் திறமையும் அனுபவமும் மிக்க மருத்துவ நிபுணர்கள் குழுவாக செயல்படும் முறை. மேலும் சிறப்பு துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் கொண்டு சிகிச்சை அளிப்பது ஆகும்.

நோயாளிகள் விரைவாக குணமடைய மருத்துமனையின் செவிலியர்கள் பங்கு அளவிட முடியாது.

அவர்களுக்கு தேவையான போது மருந்து கொடுப்பது, தன்னம்பிக்கை ஊட்டுவது, குடும்பத்தில் ஒருவராக பாவிப்பது, ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே கண்டுபிடிப்பது.
தரமான அதி நவீன உபகரணங்கள் உள்ளதால் எளிதாகவும், விரைவாகவும் நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் டயாலிசிஸ் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயல்பட்டு வருகின்றதில் பலர் பயனடைந்து வருகின்றனர்.

திருச்சி மாநகரில் தூய்மையான மருத்துவமனைகளில் ப்ரண்ட்லைன் மருத்துவமனையும் உள்ளது என்பது பெருமை கொள்ளக்கூடியது.

இதற்கு தூய்மைப் பணியாளர்களின் பணிய காரணம்.
நாங்கள் NABH தர சான்றிதழ் பெற்று இருக்கின்றது.
அனைத்து இன்சூரன்ஸ் வசதிகள் உள்ளன.
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சாலை விபத்தில் ஒருவர் அடிபட்டு வந்தால் 30 நிமிடங்களில் அவர்களுக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்து அவருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவக்குழுவினர் விரைவாக தீர்மானித்து விடுகின்றனர்.

golden hour -1 hour என்பதை இந்த மருத்துவமனையில் 30 நிமிடமாக மாற்றியுள்ளது.

பல புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இவை நோயாளிகளுக்கு பல விதங்களில் பயனளிக்கிறது. அனைத்து அறுவை சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுகிறது. அதிலும் லேப்ராஸ்கோப்பி முறையில் பொது அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம் ஆகியவற்றில் எண்ணற்ற நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா காலத்தில் ப்ரண்ட்லைன் மருத்துவமனை எப்பொழுதும் செயல்படுவது போல் செயல்பட்டு எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரண்ட் லைன் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு உதவிய மருத்துவர்கள், பொதுமக்கள், நண்பர்கள் அனைவருக்கும் மருத்துவமனை இயக்குனர் இராதாகிருஷ்ணன் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.