கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஜெர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், பல்வேறு நாடுகளில் 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை 3 வது பூஸ்டர் டோஸ்சாக செலுத்த ஐரோப்பிய யூனியனின் மருந்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னரும் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்த நிலையில் இருந்ததால் பூஸ்டர் டோசாக 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி பின்னர் 6 மாத இடைவெளிக்கு பின்னர் 3-வது டோஸ் செலுத்திக்கொள்ளலாம் என ஐரோப்பிய யூனியனின் மருந்து கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.