இடைநிற்றல் மாணவர்கள் சேர்க்கையில் சோமரசம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நரசிம்மன் சாதனை.
இடைநிற்றல் மாணவர்கள் சேர்க்கையில் சோமரசம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நரசிம்மன் சாதனை.
இடைநிற்றல் மாணவர்கள் சேர்க்கையில் இமாலய சாதனை
அரசு மேல்நிலைப்பள்ளி சோமரசம்பேட்டை திருச்சி மாவட்டம்.
தமிழகத்தில் கோவிட் பெரும் தொற்று காலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.
அதனைப் பயன்படுத்தி பல மாணவ மாணவிகள் குழந்தை தொழிலாளர்களாக மாறி வேலைக்குச் சென்றுவிட்டனர்
இடைநிற்றல் என்று சொல்லப்படும் இந்நிலையில் இருந்து மாணவர்களைக் காத்து மீண்டும் அவர்களைப் பள்ளியில் சேர்க்க தமிழக அரசும் தமிழக பள்ளிக் கல்வித்துறையும் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அவர்கள் இடைநிற்றலைத தவிர்க்க நேரடி கவனம் செலுத்தி .
தலைமை ஆசிரியர் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து மாபெரும் இயக்கமாக மாற்றி இடைநிற்றலைத் தவிர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
அவ்வகையில் சோமரசம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நரசிம்மவர்மன்
இடை நின்ற மாணவர்களை இனம் கண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களது பெற்றோர்களைச் சந்தித்து ஆலோசனை வழங்கியும் மாணவ மாணவிகள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கியும் மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளார்.
இவ்வாறு இடைநின்ற மாணவர்களில் 33 பேரைப் பள்ளியில் சேர்த்து இமாலயச் சாதனை புரிந்துள்ளார்.
இதனால் அவரைப் பெற்றோர்கள் தலைமையாசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் என பல தரப்பினரும் நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்
திருச்சி பெல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ராஜகுரு மற்றும் நாகராஜன் ஆகியோர் தலைமையாசிரியரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தும் நினைவுப் பரிசு வழங்கியும் பாராட்டினர்.
நீங்களும் பாராட்ட நினைத்தால் தொடர்புக்கு:
நரசிம்மவர்மன் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சோமரசம்பேட்டை திருச்சி
9443834067