வியாபாரம் குறைந்ததால் ஸ்ரீரங்கத்தில் பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள்.
வியாபாரம் குறைந்ததால் ஸ்ரீரங்கத்தில் பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள்.
பூக்கள் வியாபரம் மந்தம்
ஸ்ரீரங்கத்தில்
பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள்.
திருச்சி ஸ்ரீரங்கம் பூசந்தைக்கு திருச்சி மாவட்டம் எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மற்றும் ஒசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் தினந்தோறும் 50 டன் பூக்கள் விற்பனைக்காக வருகின்றன.
முகூர்த்த தினங்கள், பண்டிகைகள், கோவில் திருவிழா போன்ற காலங்களில்
பூக்களை விலை பல மடங்கு உயர்ந்தும், விற்பனையும் அதிகமாக இருக்கும்.
தற்போது புராட்சி மாதம் என்பதால் முகூர்த்த தினங்கள், பண்டிகைகள் இல்லாததாலும், வாரத்தில் 3 நாட்கள் கோவில்கள் மூடப்பட்டிருப்பதாலும் பூக்களின் விற்பனையும், விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் தற்போது தொடர்ந்து மழை பெய்வதால் ஸ்ரீரங்கம் பூச்சந்தையில் நேற்று பூக்கள் விற்பனை ஆகவில்லை.
இதனால் பூ விவசாயிகள், வியாபாரிகள் தங்களது பூக்களை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து பூவியாபாரி ரெங்கராஜ் கூறுகையில்:-
பூ விலை வீழ்ச்சியடைந்ததால் பூவிவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி தொடங்கும் வரை பூ விலை குறைவாகவே இருக்கும். அதன் பின்னர் ஆயுதபூஜை, தீபாவளி, ஐப்பசி முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை உயரும் என்றார்.