Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் 2021.

0

ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சை.சற்குணம் தலைமையில்

தூய்மை நிகழ்வுகள் 2021.

மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப தமிழக ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பாக அனைத்துப் பள்ளிகளிலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு “தூய்மை நிகழ்வுகள் 2021 ”

 

என்னும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தூய்மை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி செப்டம்பர் 1 ஆம் தேதி “தூய்மை உறுதிமொழி தினம்” கடைபிடிக்கப்பட்டது. பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் தலைமையாசிரியர் தலைமையில் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்..

செப்டம்பர் இரண்டாம் நாளான “தூய்மை விழிப்புணர்வு” நாளில் பெற்றோர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழுவினருக்கு ஊரார்க்கும் தூய்மை விழிப்புணர்வு பற்றி அறிவுறுத்தப்பட்டது.

மாணவ மாணவிகள் நேரடியாகச் சென்று பெற்றோர்களிடம் தூய்மை பற்றி எடுத்து விளக்கினார்கள்.

செப்டம்பர் 3ஆம் நாள் “சமூக விழிப்புணர்வு” நாள் கடைப்பிடிக்கப்பட்டதுஅதன்படி மாணவர்கள் சுத்தத்தைப் பேணி தூய்மையாக வைத்திருக்கும் கடைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று உரிமையாளர்களைச் சந்தித்து தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்,

செப்டம்பர் 4ஆம் நாளான இன்றைய தினம் பசுமை பள்ளி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் சென்ற வாரம் உடல்நலக்குறைவால் இறந்த ஊனையூர் ஆரம்ப பள்ளி மாணவி ஸ்ரீ க்கு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அம்மாணவியின் பெற்றோர் கையால் மரம் நடப்பட்டது.

மேலும் பள்ளியைச் சுற்றிலும் பள்ளிக்கு அருகில் உள்ள ஏரியின் கரைகளிலும் கூந்தல் பனை என்னும் அரிய வகை பனை மரங்களின் விதைகளை நட்டனர்.

இந்நிகழ்ச்சிகள் யாவும் பெருந்தொற்று காலத்தின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து சமூக இடைவெளியோடு முறையாக நடைபெற்றன.

Leave A Reply

Your email address will not be published.