திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகை அருகே சமூக விரோதிகளால் பொதுமக்கள் அச்சம்.நடவடிக்கை எடுக்குமா காவல் துறை ?
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகை அருகில் உள்ள ஆளில்லாத அரசு குடியிருப்பு பகுதியில் சமூக விரோதிகளால் பொதுமக்கள் அச்சம்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பழைய சர்க்கிக்ட் ஹவுஸ் காலனி ஐ மற்றும் ஜெ ப்ளக்குகளில் பொதுமக்கள் யாரும் இல்லை.

இந்த கட்டிடங்கள் கடந்த ஐந்து முன்பே இடிப்பதற்காக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர் . ஆனால் கட்டிடங்கள் இதுவரை இடிக்கப்படவில்லை.
இதுவே தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக ஆகியுள்ளது. இரவு ஒன்பது மணிக்கு மேல் இங்கு கூடும் இந்த நபர்கள் மது கஞ்சா போதையில் அந்தப் பக்கம் வரும் பொதுமக்களிடம் தகாத வார்த்தையில் போய் வம்பு இழுத்து வருகின்றனர். நள்ளிரவில் பட்டாக்கத்தி மூலம் கேக்குகள் வெட்டுவது,மது பாட்டில்களை ரோட்டில் அடித்து உடைப்பது என அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சில வீடுகளில் இவர்கள் முறைகேடாக மின்சாரத்தை இழுத்து மின்விசிறிகளை இயக்கி அந்த வீடுகளில் விபச்சாரப் பெண்களை அழைத்து வருவது,பணம் வைத்து கேரம் போர்டு விளையாடுவது என சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆள் இல்லாத வீடுகளில் உள்ள மின் பொருள்களை கழட்டி விற்று வருகின்றனர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்த மின் மோட்டாரை திருடி சென்று விட்டனர்,இது குறித்து காவல்துறையில் மாநகராட்சி ஊழியர் அளித்த புகாரின்பேரில் கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை மேற்கொண்ட அந்த இரண்டு தினங்கள் மட்டும் அங்கு மர்ம நபர்கள் யாரும் வரவில்லை.இந்தப் பகுதியில் கூச்சலாக உள்ளது என காவல் துறைக்கு யாராவது போன் செய்தால் போலீசார் டோல் கேட்டில் இருந்து வரும் போது கல்லுக்குழி வழியாக தப்பித்து விடுவார்கள் கல்லுக்குழி வழியாக வரும்போது டோல்கேட் வழியாக தப்பி விடுவார்கள் இரண்டு வழி இருப்பது இவர்கள் தப்பிச்செல்ல வசதியாக உள்ளது.
திருச்சியில் இரண்டு படுகொலை நடந்த பின்பு திருச்சி மாநகர் புறநகர் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 173 குற்றவாளிகளை கைது செய்து திருச்சி போலீஸார், சர்கிட்ஹவுஸ் பகுதியில் எதுவும் அசம்பாவிதம் நடை பெறும் முன் இந்த சமூக விரோதிகளையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு ?