தமிழகத்தில் நாளை 3ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதையடுத்து, அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி,
கடந்த செப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் செப்.19ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் வருகிற (26-9-2021) ஞாயிற்றுக்கிழமை (நாளை) 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கும் மூன்றாவது மாபெரும் மூன்றாவது தடுப்பூசி முகாமை முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா ஒழிக்கும் வகையில் தங்கள் பங்கை செலுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.