மாற்றுத்திறனாளிகளுக்கு
கொரோனா நிவாரணப் பொருட்கள்.
திருச்சியில் சாரல் சமூக நல அறக்கட்டளை மற்றும் எஸ் எஸ் ஹெல்த் கேர் நிறுவனங்கள் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும நிகழ்ச்சி நடைபெற்றது..
தமிழ்நாடு சுற்றுலாத்துறை திருச்சி மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, சாரல் சமூக நல அறக்கட்டளை அறங்காவலர் பி. சசிக்குமார் தலைமை வகித்தார்.
திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் டி. ஜெகதீஸ்வரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு, அரிசி, மளிகைப்பொருட்கள் கொண்ட ரூ. 500 மதிப்பிலான தொகுப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உமன்ஸ் பேரடைஸ் நிறுவன மேலாண் இயக்குநர் ஆர். சோபியா, மீனாட்சி சைக்கிள் மார்ட் உரிமையாளர் சுரேஷ்கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.