மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஒசோன் தின விழா
திருச்சி மாநகராட்சி இடை மலைப்பட்டி தொடக்கப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண்டாடப்பட்டது.
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உலக ஓசோன் தினத்தை மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் தலைமையில்
உலக ஒசோன தினத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கள் மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் கா.மருதநாயகம் ,
கலைக்காவிரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரிரும், தண்ணீர் அமைப்பின் செயலாளருமான கி.சதீஷ்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு மரக்கன்று நட்டு வைத்தார்கள் .

பூமியில் வாழும் மனிதன் உட்பட உயிரினங்களுக்கு நன்மை செய்யும் ஒசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
என உணர்த்தும் வகையில்
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் , மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் கொடுத்தும்,
“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பை எடுப்போம்”
உறுதிமொழி ஏற்றனர்.
அனைவருக்கும் துணிப்பை கொடுக்கப்பட்டது.
ஓசோன் தின ஓவியப் போட்டியில் பங்கேற்றவருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் முன்னிலை வகித்து பரிசுகள் வழங்கினார்.
கலைக்காவிரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் உடன் ஆசிரியப் பயிற்றுநர் லட்சுமி, தலைமை ஆசிரியர் ஜெயந்தி, துணை த. ஆசிரியர் புஷ்பலதா, மகாலட்சுமி ராஜஷீலா, புவனேஸ்வரி, விஜயா, சுரேஷ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .