திருச்சி தெற்கு காட்டூரில் பால்வாடிப்பள்ளி தொடங்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு பொதுமக்கள் வேண்டுகோள்.
திருவறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழிக்கு
திருச்சி தெற்கு காட்டூர் பகுதி பொதுமக்களின் வேண்டுகோள் :-
திருச்சி தெற்கு காட்டூரில் உள்ள பர்மா காலனி. குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்க குடும்பங்களில் உள்ள குழந்தைகளை பால்வாடி பள்ளிகளில் சேர்க்க மெயின் ரோடு சுற்றி சென்று பிலோமினாள், காமராஜ் நகரில் உள்ள பால்வாடி பள்ளியில் தான் சேர்க்க வேண்டும்.

குழந்தைகளுடன் பெண்கள் போக்குவரத்து நெரிசலான தஞ்சை பைபாஸ் சாலையை கிராஸ் செய்து தான் செல்ல வேண்டும்.
தெற்கு காட்டூர் பகுதியில் பால்வாடிபள்ளி தொடங்க கடந்த ஆண்டு இடம் பார்க்கப்பட்டது. பின்னர் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
பர்மா காலனி, குறிஞ்சிநகர் ஆகிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம், கொரோனா தடுப்பூசி முகாம் போடுவதற்கு இப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் தான் நடைபெறுகிறது.
இதுவே ஒரு பால்வாடி இப்பகுதியில் இருந்தால் பொதுமக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுமக்களின் இந்த கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக நிறைவேற்றுவார் என தெற்கு காட்டுர் பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு .