Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோரை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிகுழு மாநாட்டில் தீர்மானம்.

0

கோரையாற்றில்
கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
பகுதிகுழு மாநாட்டில் தீர்மானம்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட அபிஷேகபுரம் பகுதிக்குழுவின் 23வது மாநாடு கார்மல் திருமணமண்டபத்தில் தோழர் அழகப்பன் நினைவரங்கத்தில் நடந்தது.

மாநாட்டிற்கு கணேசன், கலைவாணி, சதாசிவம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டை மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா துவக்கி வைத்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின் வாழ்த்துரை வழங்கினார். வெற்றிச்செல்வன் நிறைவுரையாற்றினார்.

மாநாட்டில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 38,39,40,41,42 ஆகிய வார்டுகளில் சமுதாய கூடங்கள் அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் குப்பைகளை அகற்றி சாலை வசதி, சாக்கடை வசதி செய்து தரவேண்டும். பழுதடைந்த மின்கம்பங்கள், விளக்குகளை மாற்ற வேண்டும்.

கோரையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும்.

கிராப்பட்டி பாலம் சுரங்கபாதையில் உள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும். கருமண்டபம் – எடமலைப்பட்டிபுத்தூர் இணைப்பு சாலையை அமைத்து கொடுக்க வேண்டும். மயான வசதி செய்து தரவேண்டும்.என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் அபிஷேகபுரம் பகுதிகுழு செயலாளராக ஏ.வேலுச்சாமி, பகுதிக்குழு உறுப்பினர்களாக பி.குருநாதன், ஆர்.சதாசிவம், ஏ.சேட்டு, பி.கலைவாணி, கே.ரவி, பி.சிவா, எம்.லெனின், கே.இளங்கோவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவா நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.