போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பேரவை கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் லட்சுமணன், பி எஸ் என் எல் ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் பஞ்சப்படி உயர்வு உள்ளிட்ட ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை தமிழக உடனடியாக நிறைவேற்ற வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஓய்வூதிய தொழிலாளர்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,

ஓய்வு ஊதிய உயர்வுகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் திருச்சி மண்டல தலைவர் மணி நன்றி கூறினார்.