மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கபடும் என அறிவித்த தமிழக அரசுக்கு முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை நிறுவனர் சுப்பையா பாண்டியன் நன்றி.
முக்குலத்தோர் தேவர் சமுக அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திரு உருவ சிலை அமைக்கப்படும்
என்று அறிவித்த தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கும் 3கோடி தேவரின மக்கள் சார்பாக

முக்குலதோர் தேவர் சமூக அறக்கட்டளை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டு மூன்று முறை வென்ற முதல் சுதந்திரப் போராட்ட வீரன் நெற்கட்டும் சேவல் மன்னன் மாவீரன் பூலித்தேவனுக்கு சென்னையில் சிலை நிறுவும் படி தமிழக அரசுக்கு 30000000 தேவரின மக்கள் சார்பாக முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை வேண்டுகோள் விடுக்கின்றது
என முக்குலதோர் தேவர் சமூக அறக்கட்டளை நிறுவனர் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .