அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பி.எஸ்.,ன் மனைவி விஜயலட்சுமி (வயது 65) மாரடைப்பால் இறந்தார்.
உடல்நலக்குறைவால் சென்னை அருகே பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
மருத்துவமனைக்குச் சென்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சசிகலா அவர்கள் திடீரெனமருத்துவம் மருத்துவ மனைக்குச் சென்று ஓ.பி. பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அருகிலிருந்த ஒபிஎஸ்சும் கண் கலங்கினார் .
பின் அருகிலிருந்த ஓபிஎஸ் அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
ஆறுதல் கூறுவதற்காக ஓபியசை சந்தித்தாலும் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.