திருச்சி மரக்கடை பேலஸ் திரையரங்கம் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் ராமன் மற்றும் முத்துலட்சுமி தம்பதிகளுக்கு
2 பெண் மற்றும் 1 ஆண் என 3 குழந்தைகள் உள்ளனர். கொரோணா பாதிக்கப்பட்ட நிலையில் வருமானம் மிகவும் குறைந்த அளவில் வருவதால் குடும்ப செலவுக்கே போதுமானதாக இல்லை.
இந்நிலையில் அவரது இரண்டாவது மகள் கவுசல்யா +2 முடித்து விட்டு B.com., பட்டப்படிப்பு பயில விண்ணபித்துள்ளார்.
அவருக்கு கல்வி கட்டணம் கட்ட செலுத்த இயலாத நிலையில் குடும்பத்தினர் இருந்தனர்.
இம்மாணவி குடும்ப நிலையை மாற்றம் அமைப்பின் நிர்வாகி ஆர்.ஏ.தாமஸ் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
இத்தகவலை மாற்றம் அமைப்பின் நிர்வாகி ஆர்.ஏ.தாமஸ்,திருச்சி கோட்டை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.V.நாகராஜன் கவனத்திற்கு கொண்டு சென்றார்,
திருச்சியில் தொடர்ந்து பல உதவிகளை செய்து வரும் Rtn.V.நாகராஜன் அம்மாணவியின் கல்வி கட்டணத்திற்க்கான 1பகுதி உதவி தொகை ரூ..5000 மாணவிக்கு இன்று வழங்கினர்.
அருகில் மாணவியின் பெற்றோர், மாற்றம் அமைப்பின் நிர்வாகி ஆர்.ஏ.தாமஸ் மற்றும் பலர்
 
						 
						






