Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தியேட்டர்கள் ரசிகர்கள் இல்லாமல் திறக்கப்பட்டது.

0

திருச்சி திரையரங்குகளில் இன்று முதல் திரைப்படங்கள் திரையிடப்பட்டது,
ஆயினும் ரசிகர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் மக்களை வாட்டி வந்த நிலையில் அதன் தாக்கம் தமிழகத்தில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.


கரோனா குறைந்து வரும் சூழலில் தமிழக அரசு செப்டம்பர் 7-ஆம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்தது.கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள், பூங்காக்கள்,ஜிம் உள்ளிட்டவை அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி திறக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.


அதன்படி திருச்சியில் உள்ள ரம்பா,ஊர்வசி,சோனா மீனா,விஜய் சினிமாஸ் உள்ளிட்ட மாநகரில் உள்ள 14 தியேட்டர்களில் புது படம் எதும் திரையிட படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனையடுத்து இன்று முதல் திரையரங்குகளிலும் கர்ணன்,காஞ்சுரி உள்ளிட்ட சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது.

அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்.

கிருமி நாசினி கொண்டு கையை சுத்தப்படுத்திய பிறகே அனுமதிக்கப்பட்டனர்.


உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 50 சதவீத பார்வையாளரார்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில்,
பெரும்பாலான தியேட்டர்கள் பார்வையாளர்கள் அதிகமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.