தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பள்ளிக்கல்விக் கொள்கை குறிப்புகள் உள்ளது: மன்றம் நா.சண்முகநாதன் பாராட்டு.
தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பள்ளிக் கல்விக் கொள்கை குறிப்புகள் உள்ளது என
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி அவர்கள் இன்று(26.08.2021)
2021-22ஆம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வி கொள்கை குறிப்புகள் தாக்கல் செய்து உரையாற்றி உள்ளார்கள்.
பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் மான்யக்கோரிக்கைக்கான விவாதத்திற்கு பள்ளிக்கல்விக் கொள்கை குறிப்புகளை தாக்கல் செய்து உரையாற்றுவது இன்றே-இதுவே முதல்முறை என்பதால் தமிழ்நாட்டின் ஆசிரியர் சமுதாயம் உள்ளிட்டு மாநிலத்தின் அனைத்து தரப்பினரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
தமிழ்நாட்டின்பள்ளிக்
கல்வி மேம்பாடுகள் தொடர்பான அனைத்து வகையானஅம்சங்களையும் உள்ளடக்கியும்-
ஒருங்கிணைத்தும் மாநிலத்தின் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிடும்
வகையில் பள்ளிக்கல்வித் கொள்கை அறிக்கை அமைந்திருப்பது பெரிதும் வரவேற்புக்குரியதாகும்.

மாநிலத்தின் மலைப்பகுதி மற்றும் தொலைதூரப் பகுதி மக்களின் குழந்தைதளின் கல்வியில் பெரிதும் அக்கறைக்கொண்டு மேற்கண்ட மலைப்பகுதிகளில் மற்றும் தொலைதூரப்பகுதிகளில் 12 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்பதும்,மேலும் 22 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்பதும் ,
நடுநிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களிடம் அறிவியல் பார்வையை,அறிவியல் மனப்பான்மையை மேலும் வளர்த்தெடுத்திடும் வகையில்
மாநிலத்தின் 1748 நடுநிலைப்பள்ளிகளில் ரூ114 கோடி மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்பதும்,
ஆசிரியர் பயிற்சி முடித்து அரசுப்பள்ளி ஆசிரியர்பணிக்காக காத்திருப்போருக்கு வாழ்வளித்திடும் வகையில்
மாநிலத்தில் ஆசிரியர் தகுதித்
தேர்வுகள் முறையாக நடத்தப்படும் என்பதும், ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியத்திற்கு ரூ04.74கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதும்,மேல்நிலைப்பள்ளிகளில் 2098 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்பதும் பெரிதும் வரவேற்புக்குரியதாகும்.
தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியப் பெருமக்களும் பெரிதும் எதிர்பார்த்து இருந்த ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு முறையில் நடத்தப்படும் என்பதும்,
வெளிப்படையான
பொதுமாறுலுக்கு கலந்தாய்வு கொள்கை வகுக்கப்படும் என்பதும் பெரிதும் வரவேற்புக்குரியதாகும்.
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தை எழுத்தாளர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வகையில் “கவிமணி விருது “அறிவிக்கப்பட்டு இருப்பதும், பல்வேறு வகைகளிலும் மிகச்சிறப்பாக கல்விச் சேவையை ஆற்றியோருக்கு “மாண்புமிகு. முதலமைச்சர் விருது” வழங்கப்படும் என்பதும்,
“மாபெரும் தமிழ் கனவு “எனும் நூல் உள்ளிட்ட தமிழ்மொழியில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு தமிழ் அறிஞர்களின் தமிழ்நூல்கள் திராவிட மொழிகளில் வெளியிடப்படும் வகையில்
“திசைதோறும் திராவிடம் திட்டம்” அறிவிக்கப்பட்டு இருப்பதும் ,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “சிந்தனைச் சிற்பிகள் அரங்கம் “அமைக்கப்படும் என்பதும் தமிழ் மொழியினை வளர்த்தெடுக்கும்,தமிழின் பெருமையை -சிறப்பை உலகறியச்செய்யும் முன்னோடியான, நீண்ட கால தொலைநோக்குடைய செயல்திட்டங்கள் கொண்ட அம்சங்களாகும்.
இச்சிறப்புமிகு அம்சங்கள் பெரிதும் பாராட்டுக்குரியதாகும்.
மாநிலத்தில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன்களை பேணிப் பாதுகாத்திடும் வகையில் பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும் என்பதும்,
பள்ளிகளில் பாலியல் வன்முறைத்தடுப்பு வாரம் ஆண்டுதோறும் நவம்பர் 15முதல் 22முடிய ஒருவாரம் காலம் கடைப்பிடிக்கப்படும் என்பதும், மாணாக்கர்களின் உளவியல் ஆலோசனைகளுக்கு கட்டணமில்லா உதவி எண் அறிவிக்கப்பட்டு இருப்பதும் ,கட்டுப்பாட்டு அறைசெயல்படுத்தப் படும் என்பதும்,கோடை விடுமுறைக்காலத்தில் மாணாக்கர்களுக்கு பயன்தரும் வகையில் கோடைக் கொண்டாட்டம் கொண்டாடப்படும் என்பதும் பெரிதும் பாராட்டுக்குரியதாகும்.
மேற்கண்டவாறு மிகச்சிறப்பான ,
பல்வேறு வகையான நல்ல அம்சங்கள் கொண்ட அறிக்கையை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சட்டமன்றத்தில் படைத்துள்ளார்கள்.
இத்தகு சிறப்புமிகு பள்ளிக்கல்விக் கொள்கை அறிக்கையை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்று பெருமையோடு பாராட்டுகிறது என தெரிவித்துள்ளார்.