திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்கள் செத்து மிதந்தன .
இதனை தொடர்ந்து தெப்பக் குளத்தில் உள்ள மீன்களை பிடிக்க மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது.
இந்தப் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் ஒவ்வொன்றும் 10 கிலோ வரை எடை கொண்டதாகும்.
ஆனால் சிலர் முறைகேடாக கிலோ 50 ரூபாய் வரை விற்பதாக தகவல்.
ஆனால் மாநகராட்சி சார்பில் மீன்களை பிடிக்க எந்த டெண்டரும் விடப்படவில்லை, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் மீன்களை இலவசமாக பிடித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது திருச்சி மாநகர பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும்.
யார் வேண்டுமானாலும் மலைக்கோட்டை தெப்பக்குளம் சென்று மீன்களை இலவசமாக பிடித்துக் கொள்ளலாம்.