சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா தலைமையில் மருத்துவர்கள் சுகாதாரதுறை அமைச்சருக்கு வாழ்த்து.
சித்த மருத்துவத்துக்கு முன்னுரிமை அளித்து வரும் சுகாதார துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியனை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் சித்த மருத்துவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.
சித்த மருத்துவம் மூலம் பல நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்.
மேலும் சமீபத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில்
சித்தமருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும், பழனியில் சித்த மருத்துவக்
கல்லூரி அமைக்கப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்புகளுக்கும், தொடர்ந்து சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வருவதற்கும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளது.
இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் சித்த மருத்துவர்கள் இன்று சுகாதார துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது டாக்டர்.தமிழரசி சுப்பையா பாண்டியன், டாக்டர் சரண்யா விஜய் கார்த்திக், டாக்டர் சங்கர், டாக்டர் வானமுதன், டாக்டர் அபூபக்கர் சித்திக், டாக்டர் ஹரி கோவிந்தன், திருவண்ணாமலை டாக்டர் ராஜேஷ், டாக்டர் ஹரிதாஸ், நாகர்கோவில் டாக்டர் வேல் குமார், சென்னை டாக்டர் ராஜ்குமார், டாக்டர் கணேஷ், டாக்டர் மதி குமார், டாக்டர் குமார், டாக்டர் தங்கமணி, டாக்டர் யோக மணி, டாக்டர் குலசேகர பாண்டியன், கோவை டாக்டர் சம்பத், நாமக்கல் டாக்டர் அருள் முருகன், சென்னை டாக்டர் வெற்றி, சென்னை டாக்டர் திருத்தணிகாசலம்| காஞ்சிபுரம் டாக்டர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.