கோடநாடு விவகாரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிலவரம் என்ன? என்று மக்கள் கேட்கின்றனர்.
குற்றம்சாட்டப்பட்டவரிடம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
கோடநாடு விவகாரம் பற்றி முரண்பாடாக ஜெயக்குமார் பேசுகிறார்.
கோடநாடு விவகாரம் பற்றி முதலில் பேசியது அதிமுகவினர் தான்.
கோடநாட்டில் நடந்தது சாதாரண சம்பவம் அல்ல.
கோடநாடு விவகாரம் பற்றி ஜெயக்குமார் பதற்றத்தில் பேசுகிறார்.
சட்டம் ஒழுங்கு விவகாரம் பற்றி முதல்வர் பேசக் கூடாது என ஜெயக்குமார் சொல்வது வேடிக்கையானது. சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரத்தை கொண்டு வந்தது அதிமுக தான்.
கோடநாடு விவகாரம் மறு விசாரணை செய்யப்படவில்லை, மேலதிக விசாரணை தான் செய்யப்படுகிறது” என்றார்.