திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் எலக்ட்ரீசியன் மற்றும் அடையாளம் தெரியாத பெண் சாவு,
1.
திருச்சி மகாலட்சுமி நகரில்
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
போலீசார் விசாரணை
கரூர் மாவட்டம் தோகைமலை பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் ரவி சங்கர் (வயது 38). எலக்ட்ரீசியன் இவர் நேற்று காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் தனரத்தினம் நகர் பகுதியில் புதிய கட்டிட பணியில் மின் வயர் இணைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் வயரில் கைபட்டு ஷாக்கடித்து தூக்கி எறிந்தது. இதில் காயமடைந்த ரவிசங்கரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
2.
திருச்சி மஞ்சத்திடல் ரெயில் நிலையம் அருகில்
அடையாளம் தெரியாத பெண் பிணம்.
கொலையா? போலீஸ் விசாரணை.
திருச்சி மஞ்சத்திடல் ரெயில் நிலையம் பின்புறம் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இது குறித்து பொன்மலை ஆலத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ஜெய்கணேஷ் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நிக்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இது கொலையா? தற்கொலையா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்