திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய பெரிய கற்கள்.விரைவில் சரி செய்யப்படும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு ?
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளில் பெரிய கற்களை அமைத்து சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் .
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்
மணிகண்டம் யூனியன் , ஈகை டவுன் முதல் ஆலம்பட்டி ரோடு வரை சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வருகிறது,
இந்நிலையில் இரு புறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட தற்போது பணிகள் மும்முரமாக செல்லும் நிலையில், தற்போது திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில், இதுபோன்று பணிகள் நடக்கும் இடங்களில் எச்சரிக்கை தடுப்பு மற்றும் இரவு நேரத்தில் ஒளிரும் தடுப்புகள் அமைக்கப்படாமல் இருப்பத்தால் சாலையோரங்களில் பெரிய கற்களை அடிக்கி வைத்திருப்பதால் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது,
மேலும் தற்போது பணி நடைபெற்று வரும் பகுதியில், குச்சிகள் ஊன்றப்பட்டு அது சாலையில் விழுந்து கிடக்கும் அவலமாக உள்ளது,
எனவே பெரிய விபத்து நடக்கும் முன்பு இதை உடனடியாக சரி செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.