திருச்சி மறைமாவட்ட புதிய ஆயராக பதவியேற்ற ஆரோக்கியராஜ் சவரிமுத்துக்கு ஐசிஎப் பேராயர் ஜான் ராஜ்குமார் வாழ்த்து.
திருச்சி மறை மாவட்டத்தின் 9-வது ஆயராக பதவியேற்றுள்ள ஆயர் ஆரோக்கியராஜ் சவரிமுத்துக்கு ஐசிஎப் பேராலய பேராயர் முனைவர் ஜான். ராஜ்குமார் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில்.
கிறிஸ்துவில் மேதகு ஆயர் அவர்களுக்கு,
திருச்சி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஒன்பதாவது பேராயாக நேற்று திருநிலைப்பாட்டு நிகழ்வு விழாக்கள் செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம்.
நீண்ட நெடிய பயணமாக திருச்சபை பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டு அதன் செயல்வடிவமாக மேதகு ஆயராக பதவி ஏற்ற முனைவர் ஆரோக்கியராஜ் சவரிமுத்து அவர்களின் “பேராயர் பணிகள்” சிறக்க வேண்டுமாய் இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் இறை வேண்டலுடன் அன்பின் வாழ்த்துக்களை திருச்சி. ஐ.சி. எப் போராயம் – கிறிஸ்தவ சுவாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்
என பேராயர் ஜான். ராஜ்குமார் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.