திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் நேற்று இரவு உள்ளே சென்றுள்ளார்.
அப்போது அந்த ஏ.டி.எம். மிஷினில் வெளியை ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அந்த பகுதியில் போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் இருந்த பாலக்கரை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்ஷோ மற்றும் ஏட்டு முருகன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் ஏ.டி.எம்.மில் இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து காந்தி மார்க்கெட் போலீஸ் நிலைய குற்றப்பிரிவில் ஒப்படைத்தனர்.
பின்னர் இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் கமிஷனர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்த பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த காலத்திலும் நேர்மையாக செயல்பட்ட பாண்டியன், காவல்துறை அதிகாரி பிரான்ஷோ மற்றும் காவலர் முருகன் ஆகியோருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.