திருச்சி பாலக்கரை இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் சுனைனா, அனன்யா மாதேஷ் மற்றும் ஷைனிக்கா ஆகிய திருநங்கைகளால் குயின்ஸ் ஆப் திருச்சி என்ற பெயரில், ஷவர்மா,
ரோஸ் மில்க்,
ஜிகர்தண்டா,
சிக்கன் நட்ஸ்,
பிரட் ஆம்லெட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவைகளின் விற்பனை செய்யும் புதிய கடை திறப்பு விழா.
சிலம்ப கலையில் தனது இளம் வயதிலேயே பல சாதனைகளைப் புரிந்து, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து தங்கப் பதக்கங்களை வென்று, வெளிநாடுகளில் நடக்கின்ற சிலம்ப போட்டிகளிலும் கலந்துகொண்டு சிறப்புக்குரிய சாதனைகளைப் படைத்த அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகத்தில் இளம் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற
திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த. இரா. மோகன் – பிரகதா தம்பதியினரின் சிலம்ப செல்வி இளம் வீராங்கனை மோ.பி.சுகித்தா
திருநங்கைகள் நடத்தும் கடைக்கு நேரடியாக சென்று அவர்களின் தன்னம்பிக்கையான முயற்சிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து அவர்களுக்கு பரிசளித்து
அங்கு அவர்கள் சுத்தமான முறையில் சுவைபட தயாரித்த உணவு வகைகளை உண்டு | இங்கு தயாரிக்கபடும் அனைத்து வகை உணவுகளும் சுவையாகவும், தரமாகவும் விலை குறைவாகவும் இருக்கின்றன என கூறியதோடு மட்டுமல்லாது
அனைவரும் இவர்களை போன்றோர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் தொலைபேசி வாயிலாக சிங்கப்பூரில் வசிக்கும் தமி்ழ் மகன் என்கிற கண்ணன் மற்றும் மலேசியாவில் வசிக்கும் மலேசிய சிலம்ப கோர்வை கழக நிருவனர் முனைவர் கு.அன்பழகன் ஆகியோர் பாராட்டினார்கள்.