ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில்
4× 400 மீட்டர் தொடர் ஓட்டம் தடகள பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தாய்நாடு திரும்பிய திருச்சியை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் தனலட்சுமி சேகர் மற்றும் சுபா வெட்டேஷ் ஆகியோருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வறவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தனலெட்சுமி சேகர் அவர்களின் தாயார் மற்றும் உறவினர்கள் சுபா வெங்கடேஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனலெட்சுமி சேகரின் பயிற்ச்சியாளர்
மணிகண்ட ஆறுமுகம், மாற்றம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஏ.தாமஸ், வழக்கறிஞர் ஆறுமுகம்| வழக்கறிஞர் கார்த்திகா, ரம்யா, கீர்த்திகா, பெர்னாட் மைக்கேல் ஜோரோ,விக்கி, மகேஷ், பிரபு,ஸ்டிபன்,கர்ணா, ஆண்டனி,அருண் சுந்தர், திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு, பெருளாளர் ரவிசங்கர், அமைப்பு செயலாளர் சுரேஷ் பயிற்ச்சியாளர்கள் சுதாமதிரவிசங்கர், மரு..சத்தியமூர்த்தி, சங்கர்,
மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம்| இளைஞர் அணி மணிவேல். அண்ணாதுரை,பாபு, உடல் கல்வி பயிற்சியாளர்கள் மற்றம் ஸ்போர்ட்ஸ் அகடாமியை சேர்ந்த திரளான விளையாட்டு வீரர்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பான வறவேற்ப்பளித்தனர்.