கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் பயிலும் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆய்வு
கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் பயிலும் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேரில் ஆய்வு.
புதுக்கோட்டை மாவட்டம் ,திருவரங்குளம் ஒன்றியம் ,மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் பயிலும் கற்போருக்கான மதிப்பீட்டு முகாமினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கொரோனா பெருந்தொற்று பரவல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி கற்போர் எழுதும் மையங்கள் தயார்நிலையில் உள்ளனவா என்பதை பார்வையிட்டார்.பின்னர் மையத்தில் உரிய காற்றோட்ட வசதி,போதுமான வெளிச்சம்,மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் வந்து செல்லும் சாய்தள நடைபாதை,மின்சார வசதி,குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம்,திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நடராஜன்,ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, புவனேஸ்வரி,மலர்விழி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராசு ஆகியோர் உடன்இருந்தனர்.
இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 394 மையங்களில் நடைபெறும் கற்போருக்கான மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் மற்றும் விரிவுரையாளர்கள், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் கே.எஸ்.இராஜேந்திரன், இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் பா.சண்முகநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் , புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளரகள்,ஆசிரியர் பயிற்றுநர்கள. தங்களுக்குட்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.