Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும்.திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

0

'- Advertisement -

அரசு பள்ளிகளின் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட்டு அதன் பிறகு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறையை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

பின்னர் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் முன்பு இரு மாணவிகள் சிலம்பம் சுற்றி காண்பித்தனர் அந்த மாணவிகளை பாராட்டினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் கூறி உள்ளார்.அதன் காரணமாக எங்கு செல்கின்றோமோ அங்குள்ள பள்ளிகளை ஆய்வு செய்கின்றோம்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது.ஆசிரியர் பணிகளில் பணி நிரவல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.கொரோனா காரணமாக மே மாதம் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு நடத்தப்பட முடியவில்லை.கொரோனா குறைந்து வரும் நிலையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வர வழைத்து இருக்கிறோம்.

முதலமைச்சரின் ஆலோசனை பெற்று விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் அதன் பிறகு எந்த எந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ அது சரி செய்யப்படும்.

கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

உயர்தர ஆய்வகங்கள் 6000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருக்கிறது.உயர்நிலை பள்ளிகளிலும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாததால் பயன்பாடு இல்லாமல் மூடப்பட்டுள்ளது.அங்கு இருக்கும் கணினிகள் இயங்குகிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து அது குறித்து அறிக்கை வந்த பின்பு இயங்காத கணினிகள் மாற்றப்படும்.

கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வெழுதலாம் என கூறியுள்ளேன்.கொரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு அந்த தேர்வும் நடத்தப்படும்.அவ்வாறு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

கொரோனா சூழலை ஆராய்ந்து மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனை பெற்ற பின்பே தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்த முடிவெடுக்கப்படும்.

பள்ளி இடைநிற்றல் குறித்து கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம்.அந்த கணக்கெடுப்பு எடுத்த பின்பு ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி பள்ளி இடைநிற்றலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.