SSA/RMSA ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக நடத்திய
“கொரோனா விழிப்புணர்வு” கட்டுரைப் போட்டி அய்யனார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா குறுவளமையம் திருவளர்சோலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் மேலூர் அய்யனார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவிகள் (9-10) வகுப்பு பிரிவில் M.ஹேமதர்ஷினி முதல் பரிசாக ரு.7000 மதிப்புள்ள Tablet டேப்லெட் பரிசாக பெற்றார்.
வகுப்பு (6-8) பிரிவில் B.தர்ஷினி இரண்டாவது பரிசாக ரூ.5000 மதிப்புள்ள செல்போன் பரிசாக பெற்றார்.
மூன்றாவது பரிசாக ரூபிகா ரு. 2000 மதிப்புள்ள Scientific Calculator பரிசாக பெற்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மேலூர் அய்யனார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெட்ரா எலிசபெத் சித்ரா, தமிழாசிரியர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தலைமை ஆசிரியர் பெட்ரா எலிசபெத் சித்ரா தெரிவித்தார்.