திருச்சியில் போதை மாத்திரைகள்,கஞ்சா விற்பனை.
மாத்திரைகள், போதைஊசிகள்,கஞ்சா பறிமுதல்.
வாகனங்களுடன் 5 வாலிபர்கள் கைது
திருச்சி மாநகரில் கஞ்சா , போதை மாத்திரைகள்,போதை ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் கோட்டை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மதுரை ரோடு ஜீவா நகர் பின்புறம் ரயில்வே கேட் அருகில் உள்ள பகுதியில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள்,கஞ்சா விற்பது குறித்து வந்த தகவலையடுத்து போலீசார்அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது அப்போது அங்கு இருந்த குமார், ராம்நாத், நந்தகுமார்,பாலாஜி, பிரகாஷ் ஆகிய 5 பேரை மடக்கி பிடித்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்த 410 மாத்திரைகள் ஒரு பாட்டில் மருந்து பத்து ஊசிகள் 5 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இதே போல் வேறு எங்கும் போதை மாத்திரைகள் ஊசிகள் விற்கப்படுகிறதா என்று கோட்டை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.