திருச்சியில், பி ஃபிட் அறக்கட்டளை விளையாட்டு அகாதெமியின் 2 ஆவது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி :
கிராப்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு , பி ஃபிட் அறக்கட்டளை விளையாட்டு அகாதெமி செயல்பட்டு வருகின்றது.
இங்கு, கிரிக்கெட், கால்பந்து மற்றும் அனைத்து விதமான அத்லெட்டிக் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இளம் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையில் சுமார் 70க்கும் அதிகமானோருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. மைதானப் பயிற்சி, ஆற்று நீரில் பயிற்சி, மணற்பரப்பில் பயிற்சி, மலையேற்றப்பயிற்சி என பல்வேறு வகையான சூழலிலும் இலக்கை அடையும் வகையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற ஆ.பாக்கியராஜ் தலைமை பயிற்றுநராகவும், மற்றும் அத்லெடிக் போட்டிகளில் பங்கேற்ற அனுபவத்துடன் கூடிய முத்துசாமி, சசிகுமார், அஜித்பெரரோ உள்ளிட்டோர் பயிற்சியாளர்களாகவும் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அகாதெமி, தனது ஒராண்டை கடந்து 2 ஆவது ஆண்டி அடியெடுத்து வைத்துள்ளது.
இது தொடர்பாக திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை பயிற்சிகளை தொடர்ந்து நடைபெற்ற, 2 ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வில், கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
பயிற்சி பெறும் சிறார்களுக்கு ஸ்ரீ ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் மோகன்ராஜ் சீருடைகளை வழங்கினார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு திருச்சியிலிருந்து வீரர், வீராங்கனையர்களை பங்கேற்கச் செய்வது எனவும், விளையாட்டுத் தொடர்பாக நடத்தி வரும் இணையதளம் சேனல்களில் அதிகளவில் நிகழ்ச்சிகளை பதிவேற்றம் செய்வது, ஜூம் சந்திப்புகளை அதிகளவில் நடத்துவது, சர்வதேச அளவிலான பயிற்சிகளை அனைவரும் அறியும் வகையில் தகவல் தொழில் நுட்ப வசதியை மேம்படுத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அறக்கட்டளை மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், மோகனசுந்தரம், சேவியர், ராஜ்குமார், க்ளெமென்ட், உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.