திருச்சி மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் சர்க்கரை நோய்க்கான மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் நடைபெற்று வருகிறது.
திருச்சி கரூர் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட சித்த மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கான இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றுவருகிறது.
இன்று காலை திருச்சி புத்தூரில் உள்ள மாவட்ட அரசு சித்த மருத்துவமனையில் சர்க்கரை நோய்கான இலவச சிறப்பு முகாம் திருச்சி மாவட்டம் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் டாக்டர்.காமராஜ் அவர்கள் கூறுகையில் சித்த மருத்துவத்தின் பயன்களும் மருத்துவ சிகிச்சை முறைகளும் பற்றி நோயாளிகளுக்கு எடுத்துரைத்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் சித்த மருந்துகள் எடுத்துக் கொள்ளலாமா என்ற அச்சப்பட தேவையில்லை என்றும் சித்த மருத்துவத்தில் நிறைய மருந்துகள் பயன்கள், சிகிச்சை முறைகள் மற்றும் யோகாசன பயிற்சி வர்மா போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எளிதில் வெகுவிரைவில் நோயிலிருந்து விடுபட கூடிய வகையில் இருக்கும் என்றும் பொதுமக்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இலவசமாக மருந்துகளைப் பெற்றுக்கொண்டு, உணவு பழக்கவழக்கங்களை மாற்றுமாறும் மருந்துகளையும் தவறாமல் எடுத்துக் கொண்டு பயன்பெறுமாறும் ஆலோசனை வழங்கினார்.
அதேபோல் வருகிற காலங்களில் பல்வேறு நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் சூழ்நிலையில் சர்வரோக நிவாரணியாக நிலவேம்பு கசாயத்தை வாங்கி வைத்துக்கொண்டு நோய் தோற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு மருத்துவரின் ஆலோசனைகளுடன் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்து , அங்கு கொடுக்கப்பட்ட இலவச மருந்துகளைப் பெற்றுக்கொண்டு இந்த முகாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என தெரிவித்தனர்.
இந்த முகாமில் டாக்டர். வத்சலா வரவேற்புரை ஆற்றினார். டாக்டர் தமிழ்கனி மற்றும் டாக்டர் ராஜராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.