நடிகர் கமலின் 232-வது படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
மூன்று பேருமே தாடியுடன் உள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல், வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.
நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்… என குறிப்பிட்டுள்ளார்.