குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுக்குழு கூட்டம்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டம் தேர்தல் மாநில கௌரவத் தலைவர் தெய்வீகன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அஜந்தா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் மத்திய சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் (நேற்றுமுதல் ) மத்திய சங்க பொறுப்பாளர்கள் நிர்வாகிகளாக பணியாற்றி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தொழிற் சங்க நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு.
அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொடுக்க சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் அப்படிக் கொடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லையென்றால் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே .என் .நேரு கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
என்பன உள்ளிட்ட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
இக்கூட்டத்தில் மாநில தலைவர் கருணாநிதி, மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாநில பொருளாளர் சக்திவேல், மாநில துணை பொது செயலாளர்கள் ரவி, சங்கர் ,கிழக்கு மண்டல செயலாளர் ஜெயக்குமார், வடக்கு மண்டல செயலாளர் அமலதீபன், உள்ளிட்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.