கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு தொகுதி உட்பட்ட புத்தூர் நால்ரோடு,குறத்தெரு, செட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தில்லை நகர் திமுக பகுதி செயலாளர் கண்ணன் ஏற்பாட்டில் 5 கிலோ அரிசி,கீரை மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பினை
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சுமார் 2500 பேருக்கு வழங்கினார் …
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,சட்டமன்ற உறுப்பினர்கள் முசிறி காடுவெட்டி தியாகராஜன்,ஸ்ரீரங்கம் பழனியாண்டி,துறையூர் ஸ்டாலின் குமார், மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் காஜாமலை விஜி,வட்டச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், கோவிந்தராஜன், ராபின்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.