Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தனியார் பள்ளிக்கு நிகராக தன் பள்ளியின் தரம் உயர்த்த 5ம் வகுப்பு மாணவன் தீர்மானம் இயற்றி முதல்வர்,கல்வித் துறை அமைச்சருக்கு கடிதம்.

0

'- Advertisement -

திருச்சி துறையூர் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 5ம் வகுப்பு மாணவன் தமிழக முதல்வருக்கு கடிதம்

திருச்சி துறையூர் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 5ம் வகுப்பு மாணவன் மா.வெ.மகாபதஞ்சலி என்ற மாணவன் தமிழக முதலமைச்சர், மற்றும் கல்வி அமைச்சருக்கும் பள்ளியிற்கு கணிணி எழுத்துப் பயிற்சி, நடனம், இசை, யோகா, தற்காப்பு பயிற்சியுடன், ஸ்மார்ட் வகுப்பறை உடன் தனியார் பள்ளியிற்கு இணையாக தரம் உயர்த்த 2018 – 2019 ல் கிராமசபையில் தீர்மானம் இயற்றிய தீர்மான எண்களை கோடிட்டி கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த வயதில் கிராமசபை கூட்டத்திற்க்கு சென்ற மாணவன் மகாபதஞ்சலி , நித்தியன் நிறைவேற்றிய தீர்மானத்தை , தற்பொழுது செயல்படுத்த மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதிய அனுப்பி உள்ளார்.

மேலும் அரசுப்பள்ளி, நம்பள்ளி, அரசுப் பள்ளியில் பயின்று ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம், விஞ்ஞானி சிவம், உள்பட பல ஆட்சியர், ஆசிரியர் . மருத்துவர் மற்றும் பல உயர்ந்த பதவியை அடைந்துள்ளன . என்று தன்னுடைய (அரசு ) பள்ளியின் பெருமையை பறைசாற்றி பதாகை வைத்து உள்ளார்.

கொப்பம்பட்டி மாணவன் மகாபதஞ்சலியை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தினர் பாராட்டி உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.