Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கரப்பான்பூச்சியுடன் பிரைட் ரைஸ் டெலிவரி உணவகம் மீது பிரபல தமிழ் பட ஹீரோயின் புகார்

0

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், ஸ்விகி செயலி மூலம் ஓஎம்ஆரில் உள்ள ஒரு பிரபல உணவகம் ஒன்றில் பிரைடு ரைஸ் ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ள நிவேதா பெத்துராஜ்,

இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.